அன்புடையீர் வணக்கம்.
நமது தேசத்தில் போற்றி பாதுகாக்க படவேண்டிய அறிய பொக்கிஷங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று தான் நம் மயிலாடுதுறை, திருஇந்தளூர், ராஜா தெருவில் அமைந்துள்ள கிருஷ்ண ராமானுஜ கூடமும் அங்குள்ள கண்ணபிரானின் திருவுருவ படமும். பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் ஓவிய பாணியில் அமைந்துள்ள திருவுருவம், சரபோஜி மன்னர் காலத்தை சேர்ந்த தென்று கூறப்படுகிறது.
இந்த மடமானது 1974ம் ஆண்டு புதுப்பிக்க பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 48 ஆண்டுகள் கழிந்த நிலையில், பல முயற்சிகளுக்கு பின்னர் இதை புதுப்பிக்கும் பணி சென்ற ஆண்டு தொடங்கி தற்போது முடியும் தருவாயில் உள்ளது என்பதை இந்த பணியில் ஈடு பட்டிருக்கும் தெருவாசிகளின் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இதை நிறைவு செய்யும் முகமாக, வரும் அக்டோபர் 20ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகள் செவ்வனே துவங்கியுள்ளன.
இந்த திருப்பணிக்கு மனமுவந்து பொருளுதவி செய்த அனைவருக்கும் திருப்பணி குழுவின் சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இத்தருணத்தில், இந்நற்பணிக்கு வித்திட்டு தொடங்கி வைத்த திரு.மு.குலசேகரன் அவர்களுக்கு நமது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறோம். அதே போல், அன்றாட பணிகளை கவனித்து வரும் பொருளாளர் திரு. செல்வராஜ் (KEC) மற்றும் செயலாளர் திரு. வெங்கடேஷ் (முனிசிபாலிடி) அவர்களின் அயராது உழைப்பும், பொறுப்புணர்ச்சியும் , கடமையுணர்ச்சியும் இல்லாமல் இந்த முயற்சியில் நாம் இந்த நிலையை அடைந்திருக்க மாட்டோம். எனவே அவர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
சுபகிருது வருடம் | நேரம் | நிகழ்வுகள் |
---|---|---|
ஐப்பசி மாதம் 2 ம் தேதி 19 .10 . 2022 புதன்கிழமை | மாலை 5 . 30 மணி மாலை 6 . 00 மணி | புண்யாகவாசனம், பாலிகை பூஜை, மிருத்சங்கிரஹணம், வாஸ்து சாந்தி. திவ்யப்ரபந்தம் தொடக்கம் சாற்றுமுறை. |
ஐப்பசி மாதம் 3 ம் தேதி 20 .10 . 2022 வியாழக்கிழமை | காலை 7 .31 மணி காலை 8 .00 மணி காலை 10 .00 மணி காலை 10.45 - 11.15 மணிக்குள் | திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை மற்றும் ராமானுஜ நூற்றந்தாதி. ஹோமங்கள். பூர்ணாஹுதி. கடம் புறப்பாடு, விமானம் மஹா ஸம்ப்ரோக்ஷணம் தொடர்ந்து சாற்றுமுறை, மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல். |
தங்கள் சமூக ஊடகத்தில் மற்றும் தெரிந்தவர்களுக்கு பகிரவும்: